Thondaiman parambarai written by team of
R.D.Shanmuga Sundaram M.A.,B.Ed, Ambai
Dr.H.Malathi Harindran M.A.,Ph.D, Palayamkottai
E.Valliappan, Karur
கள்ளர், மறவர், அகமுடையார் என்ற மூன்று சமூகத்து மக்களை முக்குலத்தோர் என்றழைப்பர்.
முக்குலத்தோரில் ஒருவரான கள்ளர் ஒரு பிரிவைச் சேர்ந்தவர்கள் தொண்டைமான்கள். அதனால்தான் தொண்டடைமான் சமூகத்தவரைக் “ கள்ளர்குல தொண்டைமான் “ என்று குறிப்பிட்டுச் சொல்லுவர்.
தொண்டைமான் மரபில், நாடாண்ட காவலர்கள் உண்டு. காவலர்களே பாவலர்களாகவும் பாடியதுண்டு. படைத்தலைவனாயும் இருந்ததுண்டு. உடல் உறுதி கொண்டு உழைத்த மக்கள் சமுதாயமும் இருந்ததுண்டு.
மக்கள் ஆட்சி மலர்ந்திருக்கும் இன்றைய நாட்டில், மன்னர் ஆட்சிக்கு இடமில்லை என்றாலும் தத்தம் இருப்பிடங்களிலிருந்து புலம் பெயர்ந்து பல்வேறு இடங்களுக்கும் சென்று குடியேறி, கள்ளமிலா தொழில் பல செய்து வாழ்ந்த அக் கள்ளர்குலத் தொண்டைமான் மரபினரை இன்றைக்கும் பல ஊர்களில் காணமுடிகிறது.
ஆந்திர மாநிலத்திலுள்ள திருப்பதியின் அடர்ந்த காட்டுப் பகுதிகளில் ஒரு கூட்டத்தினர் வாழ்ந்து வந்திருக்கின்றனர். அவர்களைக் “ கள்ளர் ‘ எனக் குறிப்பிடுகின்றது புதுக்கோட்டை சமஸ்தான வரலாறு.
கள்ளர்களை நாகர் வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்று சிலரும் சோழர் வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்று சிலறும் பல்லவர் வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்று சிலரும் கூறுவதாக ந.மு. வேங்கடசாமி நாட்டார் குறிப்பிட்டிருக்கிறார்.
கள்ளர் குலத்தில்,
என 10 வீட்டுப் பிரிவினர் உள்ளனர். ‘ அரசு ‘ என்று சொல்லப்படும் இந்த 10 வீட்டுப் பிரிவினரும், ஓர் காலகட்டத்தில் தம் இருப்பிடத்தை விட்டுப் புலம் பெயர்ந்து தஞ்சைகுத் தெற்கே உள்ள அம்புக கோவில் என்ற இடத்தில் குடியேறி வாழ்ந்திருக்கின்றனர். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு நாலாப் பக்கங்களுக்கும் சென்றிருக்கின்றனர்.
ஸ்ரீ ரங்கராயர் என்ற விஜயநகர அரசன் கரம்பக்குடி வழியாக இராமேஸ்வரம் சென்றபோது அவரது யானை மதங்கொணடு பல சேதங்களை ஏற்படுத்தியிருக்கிறது. அப்பொழுது ஆவுடை ராயத் தொண்டைமான் என்பவர் வீரத்தோடு அந்த மதயானையை அடக்கி அரசன் முன் கொண்டுவந்து நிறுத்தி இருக்கிறார். அதனால் அகமகிழ்ந்த அரசன் ஆவுடை ராயத் தொண்டைமானுக்கு
ராய ராகுத்த ராய வசுரீடு
ராய மன்னீடு ராய
என்ற பட்டதையும், நிலங்கள் பலவற்றையும், அரசர்களுக்கு மட்டுமே உரிய அம்பாரி யானை, முரசு யானை, சிங்கமுகப் பல்லக்கு ஆகியவற்றையும் வழங்கியிருக்கிறார். அத்தோடு, அவற்றை வைத்துக்கொள்ளும் உரிமையினையும் வழங்கியிருக்கிறார். ராஜ மரியாதைகள் அனைத்தையும் வழங்கியிருக்கிறார்.
இது குறித்து, சீரஞ்சீவி என்பவர், ‘ ஆவுடை ராயத் தொண்டைமானின் வீர தீரச் செயல்கள், பிற்காலச் சந்ததியினர் அரச அந்தஸ்த்தை பெற வித்திட்டிருக்கின்றன ‘ என்று குறிப்பிட்டிருக்கிறர்.
புதுக்கோட்டை அரசின் அரசவைக் கவிஞராய் இருந்த வெங்கண்ணா என்பவர், ‘ தொண்டைமான் வம்சாவளி ’ என்ற ஒரு தெலுங்குக் காவியத்தை இயற்றியிருக்கிறார். அதன் மூலம் கரம்பக்குடி கள்ளர் மரபினரின் வழித்தோன்றல்கள் 15 பேர்களில், 14 – ஆவது வழித்தோன்றல் பச்சைத் தொண்டைமான் என்பது, அவரது மகனே ஆவுடை ராயத் தொண்டைமான் என்பது புலனாகிறது.
இதன் மூலம், கரம்பக்குடி கள்ளர் மரபினரே, புதுக்கோட்டை தொண்டைமான் அரசு தோற்றத்திற்கு வித்திட்டவர் என்பது உறுதியாகிறது.
கி.பி. 2, 3 – ஆம் நூற்றாண்டுகளில் தமிழகத்தின் வட எல்லையாக விளங்கிய ‘ வட வேங்கடம் ‘ தற்போது ஆந்திர மாநிலத்தோடு சேர்க்கப்பட்டு, திருப்பதியாகிவிட்டது. காடுகள் அடர்ந்த அப்பகுதியில் கள்ளர் மரபினர் வாழ்ந்து வந்திருக்கின்றனர். குடக்கரை, தொண்டைமான் கோட்டை, பொற்குப்பி என்ற மூன்று பிரிவுகளாக அப்பகுதி இருந்திருக்கிறது. இதில், ‘தொண்டைமான் கோட்டை ‘ யில் வசித்த கள்ளர்கள், “ கள்ளர் குல தொண்டைமான்கள் “ ஆவர்.
கள்ளர் தொண்டைமான்கள் உடல்திறனிலும், உள்ளத்து உறுதியிலும் வலிமை மிக்கவர்களாகத் திகழ்ந்திருக்கிறார்கள். அதனால் அவர்கள்,
போன்ற அருந்தொழில் பல ஆற்றியிருக்கின்றனர். அத்துடன் விவசாயத்திலும் சிறந்து விளங்கியிருக்கிறார்கள்
இவர்களில் சிலர், 10, 11 ஆம் நூற்றாண்டுகளில் தெற்கு நோக்கிச் சென்று பல பகுதிகளில் குடியேறி இருக்கிறார்கள்.
சங்ககாலத்தில், காஞ்சிபுரத்தைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட தொண்டைமான் மன்னன் “ தொண்டைமான் இளந்திரையன் “ ஆவான்.
இவன், தன் தந்தையாகிய சோழன் கிள்ளி வளவனுக்குப் பின், கிள்ளி வளவனுடைய ஆட்சிக்கு உட்பட்டிருந்த வடபகுதிக்கு மன்னனாக ஆக்கப்பட்டவன்.
24 கோட்டங்களையும், 79 உட் கோட்டங்களையுங்கொண்ட தமிழகத்தின் வடபகுதி, ‘ தொண்டை மண்டலம் ‘ என்று இவனது பெயரிலேயே வழங்கி வந்திருக்கிறது.
[ வாழ்வியல் களஞ்சியம், VOL – 10, தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழக வெளியீடு ]
தொண்டைமான் இளந்திரையன் பெயரால் ‘ திரையனூர் ‘ என்ற ஊர் ஒன்றும் இருந்திருக்கிறது.
‘ பெரும்பாணாற்றுப் படை ‘ யின் பாட்டுடைத் தலைவனாக விளங்கியவனும் தொண்டைமான் இளந்திரையன் ஆவான் [ கடியலூர் உருத்திரங் கண்ணனார், பெரும்பாணாற்றுப்படை, பத்துப் பாட்டு ]
கூடுதல் தகவல்களுக்கு Click Here
For comments/suggestions please email to valliappan1952@gmail.com or call 04324240181